தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக. 10) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மழை பதிவு: தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் அதிகபட்சமாக 80 மி.மீ. மழை பதிவானது. Chance of moderate rain in Western Ghats districts today.