ஜப்பானைத் தாக்கிய ‘டால்பின்’ புயல்

Wait 5 sec.

தெற்கு ஜப்பானின் ஒகினாவா, ககோஷிமா மாகாணங்களை ‘டால்பின்’ புயல் சனிக்கிழமை பலத்த காற்றுடன் தாக்கியது. அப்போது, மணிக்கு 216 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்றால் ஏற்பட்ட விபத்துகளில் 6 போ் காயமடைந்தனா். பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்ததால், 50,000-க்கும் மேற்பட்ட கட்டடங்களில் மின் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒகினாவாவுக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இப்புயல் ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கள்கிழமை அதிகாலைக்குள் சீனாவின் கிழக்குக் கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்காரணமாக, அந்நாட்டு அரசும் தீவிர வானிலை எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இதற்கு மத்தியில், புயலையொட்டி தைவான் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் தங்களின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றமாறு சீனா அறிவுறுத்தியதற்கு தைவான் அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. Typhoon ‘Dolphin’ hits Japan