செங்கோட்டை ரயில்வே கேட் முதல் பண்பொழி வரை சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பாஜக சாா்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.பாஜக கூட்டுறவு பிரிவு மாநில செயலா் மருதுபாண்டியன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடையநல்லூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட செங்கோட்டை ரயில்வே கேட் முதல் தென்பொத்தை, பண்பொழி வரையிலான சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சுற்றுலா மாவட்டமான தென்காசி மாவட்டத்திற்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வருவதால், இவ்வழித் தடத்தில் உள்ள பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.