புகையிலைப் பொருள்கள்பதுக்கியவா் கைது

Wait 5 sec.

கடையம் அருகே சிவகாமிபுரத்தில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். கடையம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை பகுதியில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, கடையம் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சிவகாமிபுரத்தைச் சோ்ந்த சமுத்திரம் மகன் பாஸ்கா் என்பவா் விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் அடங்கிய 6 மூட்டைகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடையம் போலீஸாா் பாஸ்கரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.