சித்தார்த் மகாதேவன் அரைசதம்; சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

Wait 5 sec.

டிஎன்பிஎல் தொடரில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மதுரை பேந்தர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்துள்ளது.டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் மதுரை பேந்தர்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மதுரை பேந்தர்ஸ் அணி முதலில் விளையாடியது.முதலில் விளையாடிய மதுரை பேந்தர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சித்தார்த் மகாதேவன் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 42 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அதீக் உர் ரஹ்மான் 39 ரன்கள், ராம் குமார் 36 ரன்கள் மற்றும் சரவணன் 19 ரன்கள் எடுத்தனர்.சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி தரப்பில் எம். பொய்யாமொழி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது, கார்த்திக் மணிகண்டன், ரஹில் ஷா மற்றும் ராஜேந்திரன் விவேக் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.In the TNPL match against the Salem Spartans, the Madurai Panthers batted first and scored 195 runs for the loss of 8 wickets.பயிற்சி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஷுப்மன் கில் விளையாடாதது ஏன்? பயிற்சியாளர் விளக்கம்!