நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்

Wait 5 sec.

நாடாளுமன்றத்தில் பேசாமல் ரீல்ஸ் போட்டுக்கொண்டு இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (ஆக. 10) விமர்சித்தார்.இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய அவர், ராமர் கோயில் விவகாரத்தில், மோடிஜியின் நம்பிக்கைக்குரிய அறங்காவலர்களே திருட்டில் ஈடுபட்டனர். இது குறித்த விவரங்களை பிரதமர் தாமே வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின; ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை.கடந்த 15 நாள்களில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இந்தப் பிரச்னைகள் குறித்துப் பேசவில்லை. இந்தப் பிரச்னைகள் அனைத்திற்காகவும் நாங்கள் போராடி வருகிறோம்.நாங்கள் விவாதத்தை விரும்புகிறோம். அவர்கள் (அரசு) ஏன் விவாதிக்க விரும்பவில்லை? மற்ற விவகாரங்கள் குறித்து அவர்கள் அறிக்கை அளிக்கிறார்கள்; ஆனால் இந்த விவகாரம் குறித்து ஏன் அறிக்கை அளிக்கவில்லை? நாங்கள் ஒரு அறிக்கையை மட்டுமே கேட்கிறோம்.இதற்கு அவர்களிடம் பதில் இல்லை. அவர்களால் அவை செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கமே பொறுப்பு; பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுமே பொறுப்பு. மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் கொடுமைகள் குறித்து, அமித் ஷா அவைக்கு வந்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று கடந்த 17 நாட்களாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அவர் வருவதே இல்லை. பிரதமர் மோடியோ ரீல்ஸ் போட்டுக்கொண்டு இருக்கிறார் என கார்கே குறிப்பிட்டார். நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகள் கோழைகள்: மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு!PM Modi makes reels, Amit Shah stays away Congress chief Mallikarjun Kharge targets govt on Parliament logjam