டிஎன்பிஎல்: ஜெகதீசன் அதிரடி; சேப்பாக் சூப்பர் கில்லிஸுக்கு முதல் வெற்றி!

Wait 5 sec.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி வெற்றி பெற்றது.டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் கேப்டன் என்.ஜெகதீசன் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, திண்டுக்கல் டிராகன்ஸ் முதலில் விளையாடியது.முதலில் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது.அந்த அணியில் அதிகபட்சமாக ஷிவம் சிங் 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் பாபா இந்திரஜித் மற்றும் விமல் குமார் தலா 21 ரன்கள் மற்றும் மோஹித் மிட்டன் 20 ரன்கள் எடுத்தனர். நிரங்கர் சர்மா 15 ரன்கள் எடுத்தார்.சேப்பாக் சூப்பர் கில்லிஸ் தரப்பில் அபிஷேக் தன்வர் மற்றும் அஷ்வந்த் வல்தாபா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். எம். சிலம்பரசன், விக்னேஷ் மற்றும் பிரேம் குமார் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.ஜெகதீசன் அதிரடி; சேப்பாக் சூப்பர் கில்லிஸுக்கு முதல் வெற்றி!127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி, 16.2 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தியது.சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் நாராயண் ஜெகதீசன் அரைசதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 58 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, தினேஷ் ராஜ் 16 ரன்கள், மோகிட் ஹரிஹரன் 13 ரன்கள் எடுத்தனர்.திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் கார்த்திக் சரண் மற்றும் கிஷோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய கேப்டன் என்.ஜெகதீசனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.இந்த வெற்றியின் மூலம் நடப்பு டிஎன்பில் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியுள்ளது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள சேப்பாக் சூப்பர் கில்லிஸ் ஒரு வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.The Chepauk Super Gillies team won by 7 wickets in the match against the Dindigul Dragons.டிஎன்பிஎல் வரலாற்றில் மதுரை பேந்தா்ஸ் சாதனை சேஸிங்!சதுா்வேத் அசத்தல் சதம் 121!