புதுதில்லி: வலுவான விற்பனை ஆகியவற்றால், ஜூன் உடன் முடிவடைந்த முதல் காலாண்டில், ஸ்கை கோல்ட் & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்திலிருந்த ரூ. 43.58 கோடியிலிருந்து இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்து ரூ. 104.90 கோடியாக உயர்ந்துள்ளது.மும்பையைச் சேர்ந்த இந்நிறுவனம், ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில், அதன் மொத்த வருவாய் 78% அதிகரித்து ரூ. 2,012.8 கோடியாக இருப்பதாக தெரிவித்தது. இதுவே கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் இது ரூ. 1,131.2 கோடியாக இருந்தது.மொத்தச் செலவுகள் கடந்த ஆண்டில் இதே காலகட்டத்திலிருந்த ரூ. 1,076.70 கோடியிலிருந்து ரூ. 1,885.94 கோடியாக அதிகரித்துள்ளது.நிறுவனத்தின் வலுவான வளர்ச்சியும், லாப வரம்பில் தொடர்ச்சியான முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளதையடுத்து, நடப்பு நிதியாண்டின் (2026-27) முதல் காலாண்டு சிறப்பான தொடக்கமாக அமைந்ததாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மங்கேஷ் தெரிவித்தார்.விற்பனை வளர்ச்சி, லாபம் மற்றும் பணப்புழக்கம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையைப் பேணுவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி, 2027 நிதியாண்டில் ரூ. 8,100 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்ட நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக மங்கேஷ் தெரிவித்தார்.