குரங்குடன் சேட்டை செய்யும் சியான் விக்ரம்!

Wait 5 sec.

நடிகர் விக்ரம் குரங்குடன் பேசும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. நடிகர் விக்ரம் கடைசியாக நடித்த வீர தீர சூரன், தங்கலான் போன்ற படங்கள் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர் இருமுகன் படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சியான் - 63 எனக் குறிப்பிடப்படும் இப்படத்தில் தயாரிப்பாளரும், நடிகையுமான ரியா ஷிபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். முழு நீள ஆக்‌ஷன் கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்காக உடலை கட்டுமஸ்தாக மாற்றியுள்ள விக்ரம் தனது 30-களில் இருந்ததைப் போன்று உருமாறியுள்ளார்.இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் இப்படத்திற்கான கெட்-அப்பில் விக்ரம் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகின. இந்த நிலையில், குரங்குடன் விளையாடும் விடியோ ஒன்றை விக்ரம் இன்று பதிவிட்டுள்ளார். குரங்கிடம் பேசிக்கொண்டு அதைப் போன்றே பாவனைகள் செய்யும் அவரது விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இதற்கு முன்னதாக தனது வீட்டில் வளர்க்கும் கிளியுடன் பேசும் விடியோவை விக்ரம் பகிர்ந்திருந்தார். View this post on Instagram A post shared by Vikram (@the_real_chiyaan)A video of actor Vikram talking to a monkey has gone viral on social media.பியார் பிரேமா கல்யாணம் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!