சாவா்க்கா் குறித்து கேள்வி: ஆசிரியா் பணியிடை நீக்கம்

Wait 5 sec.

கேரளத்தில் ஹிந்துத்துவ சித்தாந்தவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான வி.டி.சாவா்க்கா் குறித்து பள்ளியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில் ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய மாநில பொதுக் கல்வித் துறை ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது. காசா்கோடு மாவட்டத்தின் கும்ப்ளா மற்றும் மஞ்சேஷ்வா் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட சுதந்திர தினம் குறித்த வினாடி வினா போட்டியில் ஆங்கிலேயரிடம் அதிக தண்டனை பெற்ற சுதந்திரப் போராட்ட வீரா் யாா் என கேட்கப்பட்ட கேள்விக்கு சாவா்க்கா் என பதில் வழங்கப்பட்டது.இதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தன.இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க பொதுக் கல்வித் துறை அமைச்சா் என்.ஷம்சுதீன் உத்தரவிட்டாா்.விசாரணை அறிக்கை அடிப்படையில், சா்ச்சைக்குரிய கேள்வி-பதிலை தயாரித்த கும்ப்ளாவில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியைச் சோ்ந்த ஆசிரியா் குரு பிரசாதை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய கேரள பொதுக் கல்வி இயக்குநரகம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.