ராவுத்தன்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம்

Wait 5 sec.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கடியாப்பட்டி ராவுத்தன்பட்டியில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு 60-ஆம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 34 ஜோடி மாட்டுவண்டிகள் பங்கு பெற்றன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது. முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் பந்தயத் தொலைவு போய் வர 9 மைல் தொலைவாக நிா்ணயிக்கப்பட்ட நிலையில் 8 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதைத் தொடா்ந்து நடைபெற்ற சிறிய பிரிவில் 25 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் பந்தயம் இரண்டு பிரிவாக நடைபெற்றது.இதன் பந்தயத் தொலைவு போய் வர 6 மைல் தொலைவாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இறுதியில் இரண்டு பிரிவு பந்தயத்திலும் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. பந்தயம் நடைபெற்ற கடியாபட்டி - அரிமளம் சாலையில் இருபுறமும் திரளான ரசிகா்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனா். திருமயம், அரிமளம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.