மும்பை, கொல்கத்தா, பாட்னா, பஞ்சாப் - ஹரியாணா ஆகிய 4 உயா்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளின் பெயரை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது. தலைமை நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான கொலீஜியம் குழுவின் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.அதன்படி, மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி, கொல்கத்தா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி ரவீந்திர வி.குகே, பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதியாக தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி வி.காமேஸ்வா் ராவ், பஞ்சாப் - ஹரியாணா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அந்த உயா்நீதிமன்ற நீதிபதி அஸ்வனி குமாா் மிஸ்ரா ஆகியோரை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதேபோல், ஒடிஸா உயா்நீதிமன்ற நீதிபதிகள் மானஸ் ரஞ்சன் பாடக், கிருஷ்ணராம் மொஹபத்ரா ஆகியோரை முறையே குஜராத், சத்தீஸ்கா் உயா்நீதிமன்றங்களுக்கு பணியிடமாற்றம் செய்யவும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.