நடிகர் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் பட்டாம்பூச்சி பாடல் இணையத்தில் 5.2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து வெளியாகும் படமென்பதால் சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.நாயகியாக மமிதா பைஜூவும் முக்கிய பாத்திரங்களில் நடிகை ராதிகா, ரவீனா தண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். உறவுகளின் மேன்மையைப் பேசும் கதையாக எடுக்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது.இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் பெரியளவில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். 52 million cumulative views on YouTube for #pattampoochi and #nenobutterfly . Song is a super hit in both states ❤️ #VAS #VASfromaugust14 pic.twitter.com/HBdwyRrch4— G.V.Prakash Kumar (@gvprakash) August 10, 2026 இதனிடைய, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” படத்தின் “பட்டாம்பூச்சி” எனும் பாடல் கடந்த ஜூன் 19 ஆம் தேதி வெளியானது. இந்தப் பாடலுக்கு அருண்ராஜா காமராஜ் வரிகளை எழுத சுப்லாக்ஷினி பாடியுள்ளார்.யூடியூபில் பட்டாம்பூச்சி பாடல், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சேர்த்து 5.2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.The song Pattampoochi from the movie Viswanath and Sons, starring actor Suriya, has crossed 52 million views.ரோஜா வந்தாளே... வெளியானது சூர்யாவின் வெட்டிங் பாடல்!