கடற்கரைகளில் இலவச வைஃபை வசதி! சென்னை மாநகராட்சி திட்டம்

Wait 5 sec.

மக்கள் அதிகம் கூடும் கடற்கரைகளில் இலவச வைஃபை வசதியை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி திட்டம் கொண்டு வந்துள்ளது. இதனால் விரைவில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் மக்களுக்கு இலவச வைஃபை வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை மாநகரின் பல இடங்களில் இலவச வைஃபை கம்பங்கள் நடப்பட்டு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில், தற்போது அவற்றில் பல செயலிழந்துவிட்டன. எனவே, அவற்றில் செயல்படுத்தக் கூடிய நிலையில் உள்ள கம்பங்களையும் பயன்படுத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக 120 இடங்களில் புதிய வைஃபை கம்பங்களும் நடப்படவிருக்கின்றன.இத்திட்டம் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) நிதியின் மூலம் செயல்படுத்தப்படும். இணையச் சேவை நிறுவனங்கள் (ISPs) இலவச வை-ஃபை (Wi-Fi) சேவையை வழங்க ஒப்புக்கொண்டுள்ளன, என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தின் கீழ், மெரிகா கடற்கரையில் 50 வைஃபை கம்பகங்களும், பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகளில் தலா 25ம், நீலாங்கரை, திருவொற்றியூர் கடற்கரையில் தலா 10 வைஃபை கம்பங்களும் நடப்படவிருக்கின்றன. மேலும் சில வைஃபை வசதிகள் பூங்காக்கள், விளையாட்டு அரங்குகளிலும் உருவாக்கப்படவிருக்கின்றன.கடந்த 2021ஆம் ஆண்டு சென்னையில் பல இடங்களில் இலவச வைஃபை வசதி உருவாக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.