திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்கலாம்; ஆனால் வரலாற்றை மாற்றி எழுத முடியாது! கனிமொழி

Wait 5 sec.

திட்டங்களிலிருந்து கருணாநிதியின் பெயரை நீக்கலாம். ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது என திமுக எம்.பி. கனிமொழி பதிவிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, மாநிலம் முழுவதும் திமுக சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகின்றது.இந்நிலையில் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் கனிமொழியும் கலந்துகொண்டார். இதன்பின்னர் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், "திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம். ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது. அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, 'இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்' என்று எழுதப்பட்டிருக்கிறது!" என்று பதிவிட்டுள்ளார். திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, "இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்" என்று எழுதப்பட்டிருக்கிறது!#KalaignarForever pic.twitter.com/ATYAtJ86MY— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 7, 2026DMK MP Kanimozhi posts on the death anniversary of former Chief Minister Karunanidhiகாவிரி நீர் விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? அமைச்சர் ஆனந்த் விளக்கம்