தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக கலந்துகொள்வது குறித்து மு.க. ஸ்டாலின் முடிவெடுப்பார் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய பாஜக அரசு நிறைவேற்றுவதற்கு திமுக ஆதரவு தெரிவிக்கும் அல்லது வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்யவிருப்பதாக தில்லியில் இருந்து தகவல் வந்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.இதனைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை குறித்து நாளை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் கலந்து கொள்வார்களா என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார்.இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துப் பேசியதாவது, "தொகுதி மறுவரையறை குறித்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பேசியது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்தான். கடந்தாண்டில் தென்னிந்தியாவில் உள்ள 5 மாநில முதல்வர்களை சென்னைக்கு வரவழைத்து, ஒரு மிகப்பெரிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதன்முதலாகக் குரல் கொடுத்தவர் மு.க. ஸ்டாலின்.தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக நீங்கள் கூட்டும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசித்து முடிவு செய்வார்" என்று தெரிவித்தார்.அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுகவினர் கலந்துகொள்வார்களா? உதயநிதிக்கு நிர்மல் குமார் கேள்விWill the DMK support the delimitation bill? LoP Udhayanidhi responds