முதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!

Wait 5 sec.

'போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு' என்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் தலைமையில், மாணவர்கள் அனைவரும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.சென்னை மாநிலக் கல்லூரி அரங்கில் நடைபெற்று வரும் ’போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு’ என்ற பெயரில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்றுள்ளார்.தொடர்ந்து, போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை முதல்வர் சி. ஜோசப் விஜய் வாசிக்க, மாணவர்கள் அனைவரும் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.’நான் போதைப் பழக்கத்துக்கு ஆளாக மாட்டேன்’ என்ற உறுதிமொழியை முதல்வர் விஜய் வாசிக்க, மாணவர்கள் ஏற்றனர்.இதனைத் தொடர்ந்து, Drug & Tobacco Free Campus என்ற பரப்புரை தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் தொடங்கப்பட்டது.போதைப்பொருள் உற்பத்தி, கடத்தலை தடுப்பதில் சிறப்பாக செயல்பட்ட 15 காவல் துறை அதிகாரிகளுக்கு பதக்கங்களை முதல்வர் சி. ஜோசப் விஜய் வழங்கினார்.மேலும், பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சிறப்பாக செயல்பட்ட 6 சிறந்த தன்னார்வலர் குழுக்களுக்கு முதல்வர் விருது வழங்கினார்.Students took a pledge at the 'Drug-free Tamil Nadu' event presided over by Chief Minister Vijay.நீங்கள் இடம்மாறி இருக்கிறீர்கள், அதற்காக துதி பாடத் தேவையில்லை! ஓபிஎஸ் vs செங்கோட்டையன்