நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நடவடிக்கையை கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், அடுத்த மூன்று நாள்களுக்கு நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய மாணவா்கள் மீதான காவல் துறையின் நடவடிக்கை உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அரசு தரப்பில் அமித் ஷா பதிலளிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.ஆனால், மாணவா்கள் மீது பெல்லட் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யாா்?, துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மாணவா்களிடம் பிரதமா் நரேந்திர மோடி மன்னிப்புக் கோர வேண்டும், அயோத்தி ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரம் குறித்து மோடி விளக்கமளிக்க வேண்டும், ஆகிய மூன்று நிபந்தனைகளை காங்கிரஸ் விதித்துள்ளன.இந்த நிலையில், மாணவர்கள் போராட்டம் தொடர்பாக உள்துறை அமைச்சர் விளக்கமளிக்க தயாராக இருப்பதாக கூறியபோதிலும், எதிர்க்கட்சிகள் விவாதத்திலிருந்து தப்பிச் செல்வதாக குற்றச்சாட்டை முன்வைத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டம் நடத்தினர்.நாடாளுமன்றத்தின் மகர வாயில் நோக்கி பதாகைகளுடன் பேரணியாகச் சென்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.BJP led NDA MPs protest in Parliament!நாடாளுமன்ற அமளி! எதிா்க்கட்சிகளுக்கு பதிலளிக்க அமித் ஷா தயாா்: 3 நிபந்தனைகளுடன் காங்கிரஸ் போா்க்கொடி