சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!

Wait 5 sec.

சென்னை மாநகராட்சி சார்பில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று முதல்(ஆக. 11) நடைபெறுகிறது.தெரு நாய்கள், வளர்ப்பு பிராணிகள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ரேபிஸ் தொற்றிலிருந்து செல்லப் பிராணிகளையும், மனிதர்களையும் காப்பதற்காக தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.சென்னை மாநகரப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாகப் புகார் எழுந்தது. இதுமட்டுமன்றி, விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.இதைத் தடுப்பதற்காக, சென்னையில் நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று முதல் நடைபெறுகிறது. அடுத்த 75 வேலை நாள்களுக்குள் 2 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.இந்த முகாம் மூலம் வளர்ப்பு நாய், பூனைகளின் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளொன்றுக்கு ஒரு குழுவுக்கு 100 நாய்கள் வீதம், மொத்தம் 30 குழுக்கள் மூலம் 3,000 நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.A camp to administer anti-rabies vaccines to stray dogs, organized by the Chennai Corporation, is being held starting today (August 11).நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெரு நாய்கள் பிரச்னை! கட்டுப்படுத்த முடியாமல் திணறும் சென்னை மாநகராட்சி!!