சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (ஆக. 7) நேற்றைய விலையில் மாற்றமின்றி பவுன் ரூ.1,10,000-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது.அந்த வகையில் நாட்டில் தங்கத்தின் விலை தொடா்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், புதன்கிழமை காலை, மாலை என இருமுறை விலை உயா்ந்தது. அதன்படி, பவுனுக்கு ரூ.2,240 அதிகரித்து, ரூ.1,07,840-க்கு விற்பனையானது. அதேபோல வியாழக்கிழமையும் காலை, மாலை என இரு முறை கிராமுக்கு ரூ.270 உயா்ந்து, ரூ.13,750-க்கும், பவுனுக்கு ரூ.2,160 உயா்ந்து ரூ.1,10,000-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், ஆடி வெள்ளியில் ஆறுதல் அளிக்கும் விதமாக, வெள்ளிக்கிழமை(ஆக.7) நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.13,750-க்கும், பவுன் ரூ.1,10,000-க்கும் விற்பனையாகிறது.அதேபோன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த ஐந்து நாள்களின் தங்கம் விலை நிலவரம்:ஆக.6: 1 கிராம் ரூ.13,750, பவுன் ரூ.1,10,000ஆக.5: 1 கிராம் ரூ.13,480, பவுன் ரூ.1,07,840ஆக.4: 1 கிராம் ரூ.13,200, பவுன் ரூ.1,05,600ஆக.3: 1 கிராம் ரூ.13,250, பவுன் ரூ.1,06,000ஆக.2: 1 கிராம் ரூ.13,220, பவுன் ரூ.1,05,760கடந்த ஐந்து நாள்களின் தங்கம் விலை நிலவரம்:ஆக.6: 1 கிராம் ரூ.250, கட்டி வெள்ளி ரூ.2,50,000ஆக.5: 1 கிராம் ரூ.240, கட்டிவெள்ளி ரூ.2,40,000ஆக.4: 1 கிராம் ரூ.235, கட்டி வெள்ளி ரூ.2,35,000ஆக.3: 1 கிராம் ரூ.235, கட்டி வெள்ளி ரூ.2,35,000ஆக.2: 1 கிராம் ரூ.235, கட்டி வெள்ளி ரூ.2,35,000Gold and Silver today price in Chennai aug 6இந்தியாவில் டீலா்கள் மூலம் விற்பனை, சேவை தொடங்க ஓலா நிறுவனம் திட்டம்