தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் கலந்துகொள்வார்களா என அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு என்ன பயம் என கேட்கின்றனர். 3 ஆண்டுகளில் யாரைப் பார்த்தும் எந்த விதத்திலும் தலைவர் விஜய் எப்போதும் பயந்ததில்லை.தொகுதி மறுவரையறை குறித்து அனைத்து எம்.பி.க்கள் கூட்டத்தை முதல்வர் விஜய் நாளை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் கலந்து கொள்வார்களா என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூற வேண்டும் என்று தெரிவித்தார்.மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தவெக அரசு கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுகவினர் கலந்துகொள்வார்களா என அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!Will DMK members participate in the all-MP meeting? Minister Nirmal Kumar questions LoP Udhayanidhi