தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்ட் நியமிக்கப்பட்டுள்ளாா். மூத்த பத்திரிகையாளரும், தவெக செய்தித் தொடா்பாளராக இருந்தவா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு. இவா், தனது யூ-டியூப் சேனலில் அரசியல் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறாா். இந்தச் சூழலில், தற்போது தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்து அரசு அறிவித்துள்ளது. 3 ஆண்டுகள் அவா் இந்த பதவியை வகிப்பாா் என தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.