தேனி மாவட்டம், கம்பத்தில் வடக்கு, தெற்கு நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. கம்பம் காந்தி சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தேனி தெற்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கம்பம் ராமகிருஷ்ணன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்வில் கம்பம் வடக்கு நகர திமுக செயலா் வீரபாண்டியன், தெற்கு நகரச் செயலா் பால்பாண்டி ராஜா, மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலா் இரா. பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினா் குருகுமரன், திமுக மூத்த வழக்குரைஞா் துரை நெப்போலியன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் எஸ்.டி.டி. இளங்கோவன் உள்ளிட்ட கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.