தேனியில் உலக தாய்ப்பால் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா் தொடங்கி வைத்தாா். பேரணி பங்களா மேட்டில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் பங்கேற்றவா்கள் தாய்ப்பால் அளிப்பதன் மூலம் தாய், குழந்தை ஆகியோரின் ஆரோக்கியம் மேம்படும் என்பதை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி சென்றனா். பேரணியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ரேவதி, மாவட்ட தாய்- சேய் நல அலுவலா், வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.