தந்தையின் இறுதிச் சடங்குக்குக்கூட வராத 4 பிள்ளைகள்! இறப்புச் சான்றிதழ் கேட்டு சண்டை!

Wait 5 sec.

மத்தியப் பிரதேசத்தில், நான்கு பிள்ளைகளை தனி ஆளாக நின்று வளர்த்து பெரியவர்களாக்கிய கன்ஷியாம் என்ற 70 வயது தந்தையின் இறுதிச் சடங்குக்குக்கூட வராதவர்கள், முதியோர் இல்லத்தில் அவரது இறப்புச் சான்றிதழ் கேட்டு நிற்பது பற்றிய தகவல்கள் வந்துள்ளன.பிள்ளைகள் அனைவரும் சிறு வயதாக இருக்கும்போதே, மனைவி இறந்துவிட, சைக்கிள் டையர் மற்றும் டியூப் வணிகம் செய்து வந்த கன்ஷியாம், தனது பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து திருமணம் செய்திருக்கிறார்.சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நம் வீடு என்ற முதியோர் இல்லத்தில், சில சமூக ஆர்வலர்களால் கன்ஷியாம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளார். அப்போதே அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பேசுவதற்கு இயலாமல் இருந்துள்ளார். அது முதல் 4 ஆண்டுகளாக அவர் அந்த முதியோர் இல்லத்தில்தான் வாழ்ந்து வந்துள்ளார். அவர் சில தொலைபேசி எண்களை கொடுத்திருந்தார். அது அவரது பிள்ளைகள் தொடர்பு எண் என்று தெரிந்தது.ஆகஸ்ட் 4ஆம் தேதி உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்துவிட்டார். அதற்கு முன்பும் அவரது பிள்ளைகளுக்கு முதியோர் இல்லத்திலிருந்து தொடர்பு கொண்டு தந்தையின் உடல்நிலை குறித்து கூறியிருக்கிறார்கள். ஆனால், மகள்களோ, அவர் தனது சொத்துகளை மகன்களுக்குத்தான் கொடுத்தார். இப்போது அவரை நாங்கள் ஏன் வந்து பார்க்க வேண்டும்? சொத்துகளை வாங்கிக்கொண்டவர்கள் வந்து பார்ப்பார்கள் என்று சொல்லிவிட்டார்களாம்.மகன்களோ, அவர் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை, நாங்கள் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லிவிட்டார்களாம்.இறுதியில் அவர் மரணமடைந்த பிறகும், பிள்ளைகளுக்கு தகவல் சொல்லியும் இரண்டு நாள்கள் காத்திருந்தும் யாரும் வராததால், காவல்துறை உதவியோடு இறுதிச் சடங்கு நடத்தப்பட்டிருக்கிறது.இப்போது நான்கு பிள்ளைகளும் அவரது இறப்புச் சான்றிதழ் கேட்டு முதியோர் இல்லத்தை நாடியிருக்கிறார்கள்.ஆனால், கன்ஷ்யாம் இறப்புச் சான்றிதழை அவருடைய குடும்பத்தினரிடம் ஒருபோதும் கொடுக்கமாட்டோம். அவர் எங்களுடன்தான் இருந்தார். அவர் உயிருடன் இருந்தபோது அவரைப் பார்க்க வராதவர்கள், அவர் இறந்தபோதும் வராதவர்களுக்கு, இப்போது ஏன் அவரது இறப்புச் சான்றிதழை கொடுக்க வேண்டும்? என்று முதியோர் இல்ல நிர்வாகிகள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.கன்ஷியாமின் மனைவி இறக்கும்போது இளைய மகளுக்கு இரண்டு வயதுதானாம். ஒருவர் தன்னுடைய 4 பிள்ளைகளை வளர்த்துள்ளார். ஆனால் 4 பிள்ளைகளால் ஒரு தந்தையை பராமரிக்க முடியவில்லை. கடைசி மரியாதைகூட செலுத்த நேரமில்லை என்று வருத்தம் தெரிவிக்கிறார் முதியோர் இல்ல நிர்வாகி. Four children did not even attend their father's funeral! They fought over the death certificate!