காதல் காதல் காதல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

Wait 5 sec.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காதல் காதல் காதல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஒரே தொடரில் 3 காதல் கதைகளை மையப்படுத்தி, வித்தியாசமான பாணியில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.மூன்று மகன்களின் காதலை எதிர்க்கும் தந்தையை பிரதானப்படுத்தியும், மாறுபட்ட மூன்று ஜோடிகளின் காதல் கதையை விவரிக்கும் கதையாகவும் இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.பாரதி கண்ணம்மா தொடரின் முதல் பாகத்தில் நாயகனாக நடித்து பிரபலமான அருண் பிரசாத், மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, மலையாள சின்ன திரை நடிகர் நலீஃப் கியா ஆகியோர் நாயகர்களாக நடிக்கின்றனர்.முத்தழகு தொடர் நாயகி ஷோபனா, அண்ணா தொடரில் நடித்து பிரபலமான சுசித்ரா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தங்கமகள் தொடரில் நடித்த மனுஸ்ரீ கார்த்திகேயன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.மேலும், 3 மகன்களுக்கு தாயாக, பாக்கியலட்சுமி தொடர் சுசித்ராவும், தந்தையாக, ஹார்ட் பீட் இணையத் தொடர் பிரபலம் சந்திரசேகரும் நடிக்கிறார்கள்.காதல் காதல் காதல் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில், வரும் ஆக. 17 ஆம் தேதி முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பிக்பாஸ் - காமன் மேன் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுவதால், இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.The broadcast time of the serial Kadhal Kadhal Kadhal, currently airing on Vijay TV, has been changed.