ரியோ நடிக்கும் ராம் இன் லீலா படத்தின் டிரைலர் அறிவிப்பு!

Wait 5 sec.

ரியோ நடித்துள்ள ராம் இன் லீலா படத்தின் டிரைலர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கும் ராம் இன் லீலா படத்தில் நடிகர் ரியோ கதாநாயகனாக நடிக்கிறார். இதில், நாயகியாக அறிமுக நடிகை வர்திகா நடிக்கின்றார்.ரியோ கடைசியாக நடித்த ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய திரைப்படங்கள் நல்ல வசூலைப் பெற்று வணிக ரீதியாக வெற்றி பெற்றன. இதனால், இப்படத்தின் ஓடிடி உரிமை அமேசான் பிரைம் தளத்திற்கு நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ராம் இன் லீலா படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் டிரைலர் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வருகிற ஆக. 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.Trailer announcement for the film Ram in Leela starring Rioலோகேஷ் கனகராஜ் நடித்த டிசி படத்தின் வசூல் நிலவரம்!