கட்சி தொடங்கத் தயாராகும் தலைவர் தனுஷ்!

Wait 5 sec.

நடிகர் தனுஷ் கட்சி தொடங்கத் தயாராவதைக் குறிப்பிடும் வகையில் அவரது நற்பணி மன்றம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, லப்பர் பந்து இயக்குநர் இயக்கத்திலும் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் தமிழ் முருகன் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.சமீபத்தில் தனுஷின் பிறந்த நாளுக்காக அவரது ரசிகர்கள் சார்பில் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில், வழக்கத்திற்கு மாறாக தலைவர் தனுஷ் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.அந்த போஸ்டர் வெளியாகி சில நாள்களிலேயே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தனுஷ் கலந்துகொண்டார். அந்நிகழ்வில் , “இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். நம் ஒற்றுமைக்குப் பெரிய சக்தி உண்டு. அதற்கு நோக்கமும் உண்டு. சும்மா வந்தோம், என்னைச் சந்தித்தோம், புகைப்படம் எடுத்தோம் என மட்டும் இருக்கக் கூடாது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சிக்கல்களில் இருந்தால் உதவுங்கள். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்யுங்கள். அதற்கு எல்லாரும் கைகோர்க்க வேண்டும். நீங்கள் அதனைச் செய்வீர்கள் என நம்புகிறேன். என்னை இன்னும் வேகமாக ஓட வைக்கும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி” எனப் பேசியிருந்தார். இதன்மூலம், தனுஷ் அரசியலில் களமிறங்க காய் நகர்த்துவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அவர் நிகழ்வில் பேசியது அமைந்தது. இந்த நிலையில், தனுஷ் கட்சித் தொடங்கவிருப்பதை உறுதிசெய்யும் விதமாக அவரது நற்பணி மன்றம் சார்பில் வெளியான அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. அந்த அறிக்கையில், கோவை மாவட்டத்திற்குள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிதாக நற்பணி மன்றங்களைத் தொடங்கவும், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும் மன்ற நிர்வாகியைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி, அவரது நற்பணி மன்றம் மூலமாக தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கை நடத்த தனுஷ் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. Leader Dhanush prepares to launch a party!அதர்வா, பிரபுதேவா, உபேந்திரா! புதிய கூட்டணியுடன் களமிறங்கும் கார்த்திக் சுப்புராஜ்!