சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதுவசந்தம், கயல், மூன்று முடிச்சு ஆகிய மூன்று தொடர்கள் தொடர்ந்து 1 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது.புது வசந்தம்ஒற்றைப் பிள்ளையாக வளர்ந்த நாயகி, கூட்டுக்குடும்பத்தில் மருமகளாகச் சென்று, அங்கு சந்திக்கும் சவால்களையும், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் அன்பை எவ்வாறு பெறுகிறாள் என்பதை மையப்படுத்தியும் இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.இந்தத் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.கயல்கயல் தொடரில், சைத்ரா ரெட்டி, சஞ்ஜீவ், மீனாகுமாரி, ஷியாம் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. டிஆர்பியிலும் முன்னணியில் உள்ளது.இந்தத் தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பாகிறது.மூன்று முடிச்சுதிங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணி முதல் 9.30 வரை மூன்று முடிச்சு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் ஸ்வாதி கொண்டே நாயகியாகவும், நியாஸ் கான் நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.The three serials currently airing on Sun TV Pudhu Vasantham, Kayal, and Moondru Mudichu are being broadcast for a continuous duration of one hour.இனி வாரத்தின் 7 நாள்களும் ஒளிபரப்பாகும் 3 தொடர்கள்!