ஹார்ட் பீட் இணையத் தொடர் பிரபலம் நடிகை தீபா பாலு, தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோயிலுக்குச் சென்று, மண்குடம் சுமந்து தன்னுடைய பிரார்த்தனையை நிறைவேற்றியுள்ளார்.தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான தீபா பாலு, மருத்துவர் மற்றும் மாடல் ஆவார். யூடியூப் தொடர்களில் நடித்து பிரபலமான இவர், ஹார்ட் பீட் இணையத் தொடரில் ரீனா பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.நிஜ வாழ்க்கையிலும் மருத்துவர் என்பதால், இத்தொடரில் இவரின் இயல்பான நடிப்பு, மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, கொலைச்சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் உள்ள லால் தர்வாஜா கோயிலுக்குச் சென்ற தீபா பாலு, போனலு திருவிழாவில் பங்கேற்றார்.இந்தக் கோயிலானது, தெலங்கானா மாநிலத்தின் மிகவும் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும்இங்கு போனலு திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். ஆடி மாதத்தில் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள், தங்களின் தலைகளில் அழகாக அலங்கரிக்கப்பட்ட பானைகளில் 'போனம்' (அரிசி, பால், வெல்லம் கலந்த பிரசாதம்) சுமந்து வந்து அம்மனுக்கு செலுத்துவார்கள்.நடிகை தீபா பாலு போனலு திருவிழாவில் பங்கேற்ற விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.Actress Deepa Balu, known for the web series Heartbeat, visited a temple in Telangana and fulfilled her vow by carrying an earthen pot.திடீர் திருப்பம்! ஹார்ட் பீட் - 3 தொடரில் விஜய் சேதுபதி பட நாயகி!