ஜார்க்கண்ட் போராட்டம் ராகுலின் உண்மை முகத்தைக் காட்டுகிறது! ஹர்ஷ் மல்ஹோத்ரா

Wait 5 sec.

ஜார்க்கண்டில் போராட்டத்தில் காவல் துறை நடவடிக்கை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தில்லி பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஹர்ஷ் மல்ஹோத்ரா கடுமையாகச் சாடினார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய மல்ஹோத்ரா, மாநிலத்தில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வருவதால், ஹேமந்த் சோரனின் ராஜிநாமாவை ராகுல் கோராவில்லை. இந்த விஷயத்தில் அமைதியான போராட்டக்காரர்கள் மீதான காவல் துறை நடவடிக்கைக்கு ராகுலின் ஒப்புதல் இருப்பதாகவே கருதப்படுகிறது. ஜார்க்கண்டில் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான காவல் துறை நடவடிக்கைக்கு மத்தியில் ராகுல் காந்தியின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது ராகுலின் ஒரு முகத்தையும், ஜார்க்கண்ட் போராட்டத்தின்போது அவர் இன்னொரு முகத்தையும் காட்டியுள்ளார். இதன் மூலம் ராகுலின் இட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. மக்களவையில் ஆஜராகி மாணவர் பிரச்னைகள் குறித்த விவாதத்தில் பங்கேற்குமாறும், உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது அங்கிருந்து ஓடிவிடாமலோ அல்லது அவையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காமலோ இருக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மத்திய அமைச்சர் சவால் விடுத்தார். ராஞ்சியில் திங்கள்கிழமை அன்று, ஆயிரக்கணக்கானோர் ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கி பேரணியாகச் சென்றபோது, பல தடுப்புகளைத் தகர்த்துக் காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட பல போராட்டக்காரர்களுக்கு நான்கு காவலர்களும் காயமடைந்தனர். போராட்டக்காரர்களைத் தடுக்க காவல் துறையினர் நீர்ப் பீரங்கிகளையும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் பயன்படுத்தினர். இந்தப் போராட்டம் தொடர்ந்து 17-வது நாளை எட்டியுள்ளது. ஜார்க்கண்ட் பொதுப்பணி ஆணையம் (ஜேபிஎஸ்சி) மற்றும் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (ஜெஎஸ்ஏஸ்சி) ஆகியவற்றின் செயல்பாடுகளில் விரிவான சீர்திருத்தங்கள், பல பணி நியமனத் தேர்வுகளை ரத்து செய்தல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான புகார்கள் குறித்து சிபிஐ (சிபிஐ) அல்லது மாநிலத்திற்கு வெளியேயுள்ள ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு மூலம் சுதந்திரமான விசாரணை ஆகியவற்றை வலியுறுத்தி, மாணவர்கள், இளைஞர்களும் ஜூலை 25 முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெய்லி பாலம்: உத்தரகண்டில் பரபரப்பு!