காவிரியில் தினமும் 1 டிஎம்சி வீதம் 15 நாள்களுக்கு நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது. தில்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம், தலைவர் வினித் குப்தா தலைமையில் இன்று காலை நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய 45 டிஎம்சி நீரை திறந்து விட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. மேலும் நிலுவையில் உள்ள 33 டிஎம்சி நீரையும் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தியது. இதையடுத்து, காவிரியில் இருந்து தினமும் 1 டிஎம்சி வீதம் 15 நாள்களுக்கு கர்நாடகம் நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது. ஆக. 12 காலை 8 மணி முதல் 15 நாள்களுக்கு, பிலிகுண்டுலுவில் 12,000 கனஅடி நீர் வருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஒழுங்காற்றுக் குழு கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்வதை ஆய்வு செய்து காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடும். 1 TMC of water must be released for 15 days: Cauvery Regulation Committee recommendsகர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சு