லெஜண்ட் சரவணனின் லீடர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். துரை செந்தில் குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன், லீடர் படத்தின் நடித்திருந்தார்.இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. முழு ஆக்சன் திரைப்படமாக உருவான லீடர் திரைப்படம், ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகத் தகவல் வெளியானது.மேலும் இந்தப் படத்தில், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.லெஜெண்ட் சரவணா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ‘லீடர்’ திரைப்படம், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.இந்த நிலையில், சுதந்திர நாளை முன்னிட்டு வரும் ஆக. 15 ஆம் தேதி பகல் 12 மணிக்கு லீடர் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.After capturing the attention of fans upon its release on an OTT platform, Legend Saravanan's film The Legend is now set to be broadcast on television.தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூர்யாவின் கருப்பு திரைப்படம்!