என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டின் கதையை இயக்கும் ராம் கோபால் வர்மா!

Wait 5 sec.

இயக்குநர் ராம் கோபால் வர்மா (ஆர்ஜிவி) இயக்கும் புதிய க்ரைம் த்ரில்லர் பாணியிலான திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவைச் செர்ந்த ராம் கோபால் வர்மா தனது வித்தியாசமான திரைக்கதை, காட்சி அமைப்புகள் மூலம் 1990 - 2000களில் மிகவும் புகழ்பெற்ற இயக்குநராக அறியப்பட்டார். இவரது படங்களுக்கென தனியான ரசிகர் கூட்டம் இருப்பதும் கவனிக்கத்தகது. முன்னதாக, ராம் கோபால் வர்மா சத்யா, கம்பெனி, சர்கார் என க்ரைம் திரில்லர் பாணியில் வெற்றிப் படங்களை உருவாக்கியுள்ளார். கடைசியாக பரீட்சார்ந்த முயற்சியில் பல குறும்படங்களையும் இயக்கினார். தற்போது, மீண்டும் க்ரைம் த்ரில்லர் பாணிக்கு திரும்பியுள்ளார். ’போலிஸ் கம்பெனி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை டி சீரிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நாயகனாக ஹர்ஷவர்தன் ரானே நடிக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கும் இந்தப் படத்தில் ஹர்ஷவர்தன் ரானே மும்பையின் புகழ்பெற்ற என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ’தயா நாயக்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மும்பையில் 1997 - 2004 வரையிலான 300 ரௌடிகள் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இந்த உண்மைக் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகுமென இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார். இந்தப் படத்துக்கு முன்னதாக, போலிஸ் ஸ்டேஷன் மெயின் பூத் என்ற படத்தையும் ஆர்ஜிவி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் மனோஜ் பாஜ்பாயி நாயகனாக நடிப்பதும் குறிப்பிடத்தக்கது. 3 more pics of HARSHVARDHAN RANE as DAYA NAYAK in POLICE COMPANY pic.twitter.com/PKqn5BNFi6— Ram Gopal Varma (@RGVzoomin) August 10, 2026மலையாளத்தில் அறிமுகமான ருக்மணி வசந்த்..! படப்பிடிப்பு தொடங்கியது!Ram Gopal Varma returns to crime genre with 'Police Company', Harshvardhan Rane to star