சினிமாவில் கிடைக்காத அங்கீகாரம் சின்ன திரையில் கிடைத்தது! சந்தோஷ் பிரதாப் நெகிழ்ச்சி

Wait 5 sec.

சினிமாவில் கிடைக்காத அங்கீகாரமும், மரியாதையும் சின்ன திரையில் கிடைத்ததாக நடிகர் சந்தோஷ் பிரதாப் தெரிவித்துள்ளார். சின்ன திரை கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நடிகை திவ்யா கணேசனுக்கு, இந்த ஆண்டின் பிரபலமான முகம் என்ற விருதை நடிகர் சந்தோஷ் பிரதாப் வழங்கினார். நிகழ்ச்சியில் நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது:''சின்ன வயதில் இருந்தே நமக்கு அங்கீகாரம் கிடைத்தால்தான் நாம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று தோன்றும். அது ஒரு ஊக்கசக்தி.சினிமாவைப் பொறுத்தவரை நாம் பணி செய்வது ரசிகர்களுக்காக. அதே மாதிரிதான் சின்ன திரையும். பாரதி கண்ணம்மா நடிகை ரோஷிணியுடன் சின்ன திரை நிகழ்ச்சியில் இருக்கும்போது அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என என் தந்தை கேட்டார். அப்போதுதான் சின்ன திரையின் பலம் எனக்குப் புரிந்தது. சினிமாவில் வருவார்கள். நடிக்கவில்லை என்றால் மறந்துவிடுவார்கள். ஆனால் சின்ன திரையில் ரசிகர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நடிகரை நினைப்பார்கள். அதனால்தான் சின்ன திரையில் ஏதாவதொரு நிகழ்ச்சி மூலம் அதனை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என நினைத்து, குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்குச் சென்றேன். சினிமாவில் 10 ஆண்டுகளில் கிடைக்காத அங்கீகாரம், மரியாதை எனக்கு அந்த நிகழ்ச்சியில்தான் கிடைத்தது. அதற்காக என்றுமே நன்றிக்கடன்பட்டுள்ளேன்.சினிமாவுக்கு வர வேண்டும் என நினைத்து உழைப்பவர்களுக்கான மேடையாக சின்ன திரை உள்ளது. சினிமா, சின்ன திரை இடையே ஒரு ஆரோக்கியமான உறவு உள்ளது. இது தொடர வேண்டும். அனைவரும் ஒன்றாக சேர்ந்து மக்களை என்டர்டெயின் செய்ய வேண்டும்'' என சந்தோஷ் பேசினார். I found the recognition on the television that eluded me in cinema says actor Santhosh Prathap