லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி படம் வெற்றிபெற்றுள்ள நிலையில், இதே கூட்டணி மேலும் ஒரு படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமான படம் 'டிசி’. இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படம் கடந்த வெள்ளியன்று (ஆகஸ்ட் 7) திரையரங்குகளில் வெளியானது. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அனிருத் இசை இப்படத்தின் ஆல்பம் வெளியானபோதே பெரிதும் பேசப்பட்ட நிலையில், படத்தில் அவருடைய பங்களிப்பு ஆக்ஷன் காட்சிகளைகூட மிகவும் ரசிக்கக்கூடிய வகையில் மாற்றியுள்ளதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.நடிகராக லோகேஷ் கனகராஜுக்கு சிறப்பான திரைப்படமாக அமைந்துள்ள இப்படம், ஆக்ஷன் காட்சிகளை அழகியல் தன்மையுடன் படமாக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு பாராட்டுகளையும் பெற்றுத் தந்துள்ளது. மேலும், 4 நாள்களில் ரூ. 26 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளது.இதனைத் தொடர்ந்து, டிசி படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்லு அர்ஜூன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்தப் படத்தை இயக்கவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் 2027-ல் அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜ் - அனிருத் - சன் பிக்சர்ஸ் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. With the DC film featuring Lokesh Kanagaraj proving to be a success, reports have emerged that the same team is set to collaborate on another movie.லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி படத்தின் வசூல் நிலவரம்!