உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் 5-ஆம் இடத்தில் இருக்கும் இந்திய அணி, இறுதிக்குப் போட்டிக்கு முன்னேறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடர் வருகிற 15 ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக பயிற்சி ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்தது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் 48.15 புள்ளி சதவிகிதங்களுடன் 5-ஆம் இடத்தில் இருக்கும் இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுடன் ஒப்பிடுகையில் டெஸ்ட் தொடர்கள் இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை. 2024 ஆம் ஆண்டிலிருந்து மேற்கிந்தியத் தீவுகளுடன் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் வருகைக்குப் பின்னர், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இந்திய மண்ணிலும், ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர்-கவாஸ்கர் தொடரை இழந்ததை தொடர்ந்து இங்கிலாந்து எதிரான தொடரை சமன் செய்தது. மூன்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் இரண்டு முறை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்ற இந்திய அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி, நான்கில் வெற்றியும் நான்கில் தோல்வியும் ஒன்றில் டிரா என 48.15 புள்ளி சதவிகிதங்களுடன் 5-ஆம் இடத்தில் இருக்கிறது. நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி, இலங்கைக்கு எதிராக 2 போட்டிகள், நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள், அடுத்தாண்டு ஜனவரி, பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த 9 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் 60 சதவிகித புள்ளிகளைப் பெற இயலும். ஏற்கெனவே, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் தற்போது 70 சதவிகிதப் புள்ளிகளுக்கும் அதிகமாக பெற்றிருக்கின்றன. இதனால், இலங்கை, நியூசிலாந்துக்கு எதிராக தொடரை முழுமையாக வென்றாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் வெற்றியைப் பொறுத்தே இந்தியாவின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்புகள் தெரியவரும். India return to the World Test Championship with their qualification hopes hanging by a thread after a prolonged run of poor results. With nine Tests remaining, Shubman Gill's side need a near-perfect finish to keep their final hopes alive.