ஐபிஎல் தொடரில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் தில்லி கேபிடல்ஸ் அணிக்காகவும், உள்ளூர் போட்டிகளில் மேற்கு வங்க அணிக்காகவும் விளையாடி வருபவர் அபிஷேக் போரல்.இவர், திருமணம் செய்து கொள்வதாகப் பொய்யான வாக்குறுதி அளித்துத் தன்னுடன் பாலியல் உறவு மேற்கொண்டதாகவும், பின்னர், தனக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த ஜூன் 23 அன்று ஹூக்ளியில் உள்ள மோக்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.மேலும், மூன்று ஆண்டுகள் இருவரும் காதலித்ததாகவும், அபிஷேக் போரலுடன் தான் வெளிநாடு பயணம் மேற்கொண்டதாகவும் புகாரில் அப்பெண் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கின் விசாரணைக்காக சந்தன்நகரில் உள்ள அபிஷேக்கின் வீட்டுக்கு பல முறை காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்றும் அவரைக் காண முடியவில்லை.இதனைத் தொடர்ந்து அபிஷேக் போரல் மீது பிஎன்எஸ் (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பல்வேறு பிரிவுகளின் கீழ் (பிரிவுகள் 69, 311, 318, 66 மற்றும் 72 உட்பட) வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் உத்தரவு பெற்ற காவல்துறையினர் திங்கள்கிழமை நள்ளிரவு அவரை கைது செய்தனர்.சின்சுரா நீதிமன்றத்தில் அபிஷேக் போரலைக் காவல்துறையினர் இன்று ஆஜர்படுத்தப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Delhi Capitals cricketer Abishek Porel arrested over rape allegationசிஎஸ்கே அணிக்கு தலைமைப் பயிற்சியாளராகும் மெக்கல்லம்? சூசகமாக அறிவிப்பு!