லோன் மூலமாக லிவர்பூல் அணியில் இணைந்த பார்சிலோனாவின் கேப்டன்!

Wait 5 sec.

பார்சிலோனா கால்பந்து அணியின் கேப்டன் ரொனால்ட் அரௌகா (27 வயது) லோன் அடிப்படையில் லிவர்பூல் அணிக்கு மாறியுள்ளார். உருகுவே நாட்டைச் சேர்ந்த டிஃபெண்டர் ரொனால்ட் அரௌகா பார்சிலோனா அணியில் முக்கியமான வீரராக இருந்தார். தற்போது வயது காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மாற்றத்தின் மூலமாக ரொனால்ட் அரௌகா தனது சம்பளத்தில் சிறிதளவு விட்டுக்கொடுத்துள்ளார். தொடக்கத்தில் லிவர்பூல் அணி 47 மில்லியன் பவுண்ட்ஸ் (இந்திய மதிப்பில் ரூ. 605.21 கோடி) கொடுத்து அவரை வாங்கவிருந்தது. கடந்த 2025-26 சீசனில் ஐந்தாம் இடம் பிடித்த லிவர்பூல் அணி அதற்கு முந்தைய சீசனில் பிரீமியர் லீக் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த மாற்றம் குறித்து ரொனால்ட் அரௌகா கூறியிருப்பதாவது: என் கால்பந்து பயணத்தில் இது சரியான மாற்றம். இந்த மாற்றத்தை நான் கண்டிப்பாக எடுத்தாக வேண்டும். என்னை லிவர்பூல் அணி எடுக்க விரும்புவதாக தகவல் வெளியானதும் எல்லாமும் விரைவாகவே நடந்து முடிந்துவிட்டது. லிவர்பூல் அணிக்கு வந்தது மகிழ்ச்சி. விளையாட ஆர்வத்துடன் இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். We have agreed a deal to sign Ronald Araujo on loan from FC Barcelona for the 2026-27 season, subject to a successful work permit application and international clearance pic.twitter.com/RGfTzawvqR— Liverpool FC (@LFC) August 10, 2026Araujo calls Liverpool loan an ''ideal move'' after leaving Barcelona on pay-cut deal