புதுதில்லி: அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைஸ் லிமிடெட், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் 38.4 சதவீதம் அதிகரித்து ரூ. 610.4 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 441 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியது. முதல் காலாண்டில் செயல்பாடுகள் மூலம் ஈட்டப்பட்ட ஒருங்கிணைந்த வருவாய் ரூ. 7,043.5 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் இது ரூ. 5,842.1 கோடியாக இருந்தது.ஆய்வுக்கு உட்பட்ட காலாண்டில் மொத்தச் செலவுகள் ரூ. 6,306.9 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ. 5,313.2 கோடியாக இருந்தது.முதல் காலாண்டில், சுகாதாரச் சேவைகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ. 3,619.5 கோடியாக இருந்தது. அதே வேளையில், டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் மருந்தக விநியோகப் பிரிவின் வருவாய் ரூ. 2,977 கோடியாக அதிகரித்தது. அதே வேளையில், சில்லறை பிரிவில் அதன் வருவாய் ரூ. 499.5 கோடியாக உள்ளதாக தெரிவித்தது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ. 435.1 கோடியாக இருந்தது.Apollo Hospitals Enterprise Ltd reported a 38.4 per cent rise in consolidated profit.கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு லாபம் 39% உயர்வு!