தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்படி, சைபர் கிரைம் டிஜிபி பால நாக தேவி, சென்னை குற்றப்பிரிவு சிஐடியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபி அபின் தினேஷ் மோடக் சென்னை சைபர் கிரைம் ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் ஈஸ்வரன், சென்னை கமாண்டோ படை எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. சரவணன் சென்னை பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்பி டி. ரமேஷ்பாபு நெல்லை துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சொந்தமாக வீடு, மனை வாங்க வாய்ப்பு! தமிழக அரசு அறிவிப்பு!IPS officers transferred