இன்னா புள்ள படமா... கோலிவுட்டில் அறிமுகமாகும் இன்ஸ்டா புகழ் பாலமுருகன்!

Wait 5 sec.

விஜய் சேதுபதியின் பத்தா படத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் புகழ் பெற்ற பாலமுருகன் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். இவரும் மல்லேஷ் கண்ணனும் இணைந்து நகைச்சுவை விடியோக்களை பதிவிட்டு கவனம் பெற்றார்கள். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பான் இந்திய அளவிலும் கவனம் பெற்று வருகிறார். இறுதியாக இவர் நடித்த மகாராஜா, தலைவன் தலைவி ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாகின. தற்போது, இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் பத்தா எனும் படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் அக். 1 ஆம் தேதி வெளியாகும் என்பதையும் படத்தின் தயாரிப்பாளர் அட்லி தெரிவித்துள்ளார்.சாய் அபயங்கர் இசையமைப்பில் உருவாகும் இத்திரைப்படம் 1960-களில் நடந்த கதையாக எழுதப்பட்டுள்ளது. இதன் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.இன்ஸ்டாகிராமில் இருந்து பலரும் திரைத்துறை நோக்கி வந்துகொண்டு இருக்கிறார்கள். அப்படித்தான் மலையாளத்தில் வாழ 2 படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.விஜய் சேதுபதி இவர்களது விடியோக்களை பார்த்து பாராட்டி இருந்தார். தற்போது, அவருடனே நடித்தும் அசத்தியுள்ளார். ‘இன்னா புள்ள சவுக்கியமா..’ என்ற விடியோவில் பாலமுருகன் தமிழகம் முழுவதும் மிகவும் புகழ்பெற்றார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது: மிகப்பெரிய திரையில் எனது முதல் அறிமுகம். எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குநர் பாலாஜி தரணிதரனுக்கு இதயப்பூர்வமான நன்றிகள். மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு சிறப்பான வாழ்த்து. மக்களுக்கும் நன்றி எனக் கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் பலரும், “இன்னா புள்ள படமா...” என அவரது பாணியிலேயே வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். View this post on Instagram ரவி தேஜா - பிரியா பவானி ஷங்கரின் இருமுடி கட்டு பட டிரைலர்!Instagram fame Balamurugan makes his debut in the movie 'Paththa'!