மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்

Wait 5 sec.

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு, மாணவர்கள் போராட்டத்தில் தடியடி என எதற்கும் பாஜகவிடம் பதில் இல்லை என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று (ஆக. 12) தெரிவித்தார். இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:''ராமர் கோயில் நன்கொடை முறைகேடு, மாணவர்கள் போராட்டம் என இரண்டு விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடைபெற வேண்டும் என்பதே சமாஜவாதி கட்சியின் நிலைப்பாடு.கல்வி மற்றும் தேர்வு விவகாரத்தில் யாருக்கு எதிராகக் கேள்விகள் எழுப்பப்பட்டன? அல்லது மத நிறுவனங்கள் தொடர்பான விவகாரத்தில் யாருக்கு எதிராகக் கேள்விகள் எழுப்பப்பட்டன? அதனால்தான் இந்த இரண்டு விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அரசிடம் இதற்கு பதில்கள் இல்லை. லக்னெளவிலிருந்து வந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (SIT) அறிக்கையில், அரசு அல்லது பாஜகவுடன் தொடர்புடைய பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் அனைத்தும் சிறுபான்மையினருக்கு எதிரானதாகவே உள்ளது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சீர்திருத்த மசோதா சிறுபான்மையினரையே குறிவைக்கிறது. இந்த மசோதா அமல்படுத்தப்பட்டால், மற்ற நிதிகளையும் இது பாதிக்கும்'' எனக் குறிப்பிட்டார்.9 நாள்களாக உண்ணாவிரதம் இருப்பவரை காவல் துறை தாக்குவது சரியா?Govt has no answers Akhilesh Yadav demands debate on student protests, Ram Temple donations row