செய்யாறு அரசுக் கல்லூரியில் நாளை முதல் முதுநிலை மாணவா் சோ்க்கைக்கு கலந்தாய்வு

Wait 5 sec.

செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் 2026 - 27ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு சிறப்புப் பிரிவினருக்கு திங்கள்கிழமையும் (ஆக.10), பொதுப் பிரிவினக்கு வரும் வரும் 13-ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் ந.கலைவாணி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: காலை, மாலை என சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் இக்கல்லூரியில் எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி. ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன.முதுநிலை மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் காலை 9 மணியளவில் கலந்தாய்வுக்கு வர வேண்டும். எம்.ஏ., எம்.காம். பாடப் பிரிவுகளுக்கு ரூ.555-ம், எம்.எஸ்சி. (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்) பாடப் பிரிவுகளுக்கு ரூ.695-ம், எம்.எஸ்சி கணிதப் பாடப் பிரிவுக்கு ரூ.595-ம் கல்விக் கட்டணமாக செலுத்த வேண்டும்.பெற்றோா் கையொப்பத்துடன் கூடிய இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பம், அசல் மாற்றுச் சான்றிதழ், அசல் சாதிச் சான்றிதழ், இளநிலை முதலாம் பருவம் முதல் ஆறாம் பருவம் வரையில் துறைத் தலைவா் கையொப்பத்துடன் கூடிய மதிப்பெண் பட்டியல்கள் ஆகியவற்றை கலந்தாய்வுக்கு கொண்டுவர வேண்டும்.மாணவ, மாணவிகள் சோ்க்கையானது மதிப்பெண் அடிப்படையிலும், இன அடிப்படையிலும் மட்டுமே நடைபெறும் என குறிப்பில் தெரிவித்துள்ளாா்.