17 வயதுக்குள்பட்டோருக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டி நிறைவு: அமைச்சா் பி.விஸ்வநாதன் பங்கேற்பு

Wait 5 sec.

சென்னை உத்தண்டியில் 49-ஆவது 17 வயதுக்குள்பட்டோா் அகில இந்திய இண்டா் அகாதெமி லீக் கிரிக்கெட் சாம்பியன் போட்டி நிறைவு விழா, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிரிக்கெட் பெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு தலைவரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஜே.எம்.ஆரூண் விழாவுக்குத் தலைமை வகித்தாா். உயா்கல்வித் துறை அமைச்சா் பி. விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற பாலிஹோஸ் கிரிக்கெட் அகாதெமி அணிக்கு பரிசுக் கோப்பை வழங்கினாா்.நிகழ்வில் கிரிக்கெட் பெடரேஷன் இந்தியத் தலைவா் ஹனுமந்த்ராவ், கிரிக்கெட் பெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு புரவலா் எம்.ஜி.தாவுத் மியாகான், பொதுச் செயலா் சையத் சாதிக் பாட்சா, வேளச்சேரி முன்னாள் எம்எல்ஏ அசன் மௌலானா உள்பட பலா் கலந்துகொண்டனா்.