‘நீங்கள் பேட்மேனா?’.. ஜென்ஸீக்களின் கேள்விகளுக்கு ராகுல் ‘கலகல’ பதில்!

Wait 5 sec.

ஜென்ஸீக்களின் கேள்விகளுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கலகலப்பாக பதிலளித்தார்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி, வியாழக்கிழமை இரவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'என்னிடம் எதையும் கேளுங்கள் - Ask Me Anything' நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் பேட்மேன், மீம்ஸ்கள், நாய்கள் மற்றும் மாணவர் போராட்டங்கள் என ஜென்ஸீ இளைஞர்களும், மாணவர்கள் பலரும் தங்களது கேள்வியை எழுப்பியிருந்தனர்.இந்த நிகழ்வில் ஒருவர் நீங்க பேட்மேனா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்குப் பதிலளித்திருந்த ராகுல்காந்தி, “என்னையும் பேட்மேனையும் ஒரே அறையில் இதுவரை யாரும் பார்த்ததில்லை” எனக் கிண்டலாக பதிவிட்டார். Question: Are you Batman?LoP Rahul Gandhi on Insta: Let’s just say that no one has ever seen ME and BATMAN in the same room together! pic.twitter.com/5epCvSGsnp— Mohit Chauhan (@mohitlaws) August 6, 2026சமீபகாலமாகவே ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில் ஒன்றான பேட்மேனின் அனைத்துத் தகுதிகளும் அவருக்கு இருப்பதாக ஜென்ஸீ இளைஞர்கள் கூறிவரும் சூழலில் ராகுலின் பதிலும் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு அரசும் மாணவர்கள் கூறுவதைக் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கடந்த மாத மாணவர் போராட்டங்களில் தனக்குப் பிடித்த மீம் எது என்று ஜென்ஸீ ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.பேட்மேனை மட்டும் பதிலளிக்காமல், பிரதமர் மோடியையும் சீண்டிய ராகுல், “பிரதமர் இல்லத்திலிருந்து நள்ளிரவில் ஒரு விடியோ வெளியானது, அந்த விடியோவில் மிகவும் பதற்றமான பிரதமரைப் பார்த்தது மிகவும் நகைச்சுவையாக இருந்தது” என்றும் அவர் குறிப்பிட்டார்.யாருடைய தத்துவங்கள் பிடிக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த ராகுல், “கௌதம புத்தர், குருநானக், பசவண்ணா, பிர்சா முண்டா, பெரியார், மகாத்மா பூலே, நாராயண குரு, அம்பேத்கர் மற்றும் மகாத்மா காந்தி உள்ளிட்டோரின் பெயர்களைக் குறிப்பிட்டார்.Rahul Gandhi used an Instagram AMA to answer questions on protests, memes, pets and philosophy. The exchange showed how political leaders are sharpening their digital outreach to younger audiences.