சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!

Wait 5 sec.

சென்னையில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஆக. 13) தொடக்கிவைத்தார். தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார். சுமார் ஒரு லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் இந்த மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்கள் ஒன்றிணையும் முக்கிய தளமாக இம்மாநாடு அமையவுள்ளது என ஏற்கனவே தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா பதிவிட்டிருந்தார். தமிழ்நாட்டின் மீது உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, ஒவ்வொரு முதலீட்டையும் மக்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக மாற்றும் நமது பயணத்தில், ‘வெற்றி தமிழ்நாடு 2026’ ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் கூறியிருத்தது குறிப்பிடத்தக்கது. The TVK government first investors conference has begun in Chennai