சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஆக. 13) சவரனுக்கு ரூ. 160 உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் சமீபமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.இன்றைய தங்கம் விலை இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைந்த நிலையில் செவ்வாய் காலை சவரனுக்கு ரூ. 2,400 உயர்ந்து பின்னர் மாலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது. தொடர்ந்து நேற்று (புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 400 உயர்ந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. இன்று (ஆக.13, வியாழக்கிழமை) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,13,760-க்கும் கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,220-க்கும் விற்பனையாகிறது.சமீபமாக கடந்த ஆக. 4 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 1,05,600 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.வெள்ளி விலைவெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 260-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.Chennai live gold and silver rate today (aug 13)சாம்சங் கேலக்ஸி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! இந்தியாவில் விலை எவ்வளவு?