ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புவெற்றித் தமிழ்நாடு மாநாட்டில் செய்யப்படவுள்ள முதலீட்டின் மூலமாக 1,06,998 வேலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு!முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இன்றைய மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்மூலம், ரூ. ஒரு லட்சம் கோடி அளவுக்கு முதலீடு கிடைக்கும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.‘வெற்றித் தமிழ்நாடு’தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று, வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்கில் ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ இன்று சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறுகிறது.