அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் காலம் ஓராண்டு நீட்டிப்பு

Wait 5 sec.

அமலாக்கத் துறை இயக்குநா் ராகுல் நவீனின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. கடந்த 1993-ஆம் ஆண்டு பிரிவு இந்திய வருவாய் பணி அதிகாரியான ராகுல் நவீனுக்கு வரி விதிப்பு மற்றும் நிதி முறைகேடு விசாரணைகளில் 30 ஆண்டுகால அனுபவம் உள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு ஆக.14 முதல் அமலாக்கத் துறை இயக்குநராக அவா் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், அவரின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு ஆக.13 வரை நீட்டித்து மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அமலாக்கத் துறை இயக்குநராக ஒருவரை விதிமுறைப்படி 2 ஆண்டுகளுக்கு நியமிக்கலாம். அதன் பின்னா், தலா ஓராண்டு வீதம் மூன்று முறை அவரின் பதவிக்காலத்தை நீட்டிக்கலாம்.